ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் |
பெற்ற படம் சம்சாரம் அது மின்சாரம். விசு இயக்கி, நடித்திருந்தார். லட்சுமி, ரகுவரன், கமலா காமேஷ், மனோரமா, இளவரசி, கிஷ்மு ஆகியோரும் நடித்திருந்தார்கள். சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். வெள்ளிவிழா கண்ட இந்தப் படம் இன்னொரு தமிழ் படத்தின் ரீமேக் என்பது பலருக்கும் தெரியாது.
விசு நடத்தி வந்த உறவுக்கு கை கொடுப்போம் என்ற நாடகத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வாங்கி 1975ம் ஆண்டு படமாக தயாரித்தார். ஒய்.ஜி.மகேந்திரன் அதை இயக்கினார். ஜெமினி கணேசன், சவுகார் ஜானகி, தேங்காய் சீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படம்தான் சிறிய மாற்றங்களுடன் சம்சாரம் அது மின்சாரம் படமாக மீண்டும் தயாரானது. உறவுக்கு கை கொடுப்போம் படம் பெரும் தோல்வியை தழுவியது சம்சாரம் அது மின்சாரம் பெரும் வெற்றி பெற்றது.
தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணனுக்கு விசு பல கதைகள் சொன்னார். எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. சம்சாரம் அது மின்சாரம் கதை பிடித்திருந்தது. ஆனால் இது ஏற்கெனவே வெளிவந்து தோற்ற படத்தின் கதை என்றார் விசு. அதனால் என்ன தோற்ற கதையை ஜெயிக்க வைப்போம் என்று சொன்ன சரவணன் கதையில் மாற்றம் செய்து மனோரமா கேரக்டரை சேர்க்கச் சொல்லி படத்தை தயாரித்தார். படம் வசூலை குவித்ததோடு ஜனாதிபதி விருதையும் பெற்றது.