முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

நடிகர் சூர்யா, இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது, ஆனால் இதை சூர்யா தரப்பு மறுத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‛தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் சூர்யா, இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சூர்யா, இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலத்திற்கு வருகிறார். அவருக்கு சில மரியாதைகள் எல்லாம் செய்யப்படுகிறது. பின்னர் அவர், அங்கு வழிபாடு நடத்துவது போன்று அந்த வீடியோ உள்ளது. சுமார் 3 நிமிடங்கள் இந்த வீடியோ ஓடுகிறது. இதை பார்த்த பலரும் சூர்யா மதம் மாறிவிட்டார் என்று ஒரு தகவலை பரப்பி வருகின்றனர். ஆனால் இதை சூர்யா தரப்பு மறுத்துள்ளது.
‛சிங்கம்-2 படப்பிடிப்புக்காக சூர்யா ஆந்திராவில் இருந்தபோது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த அழைப்பின் பேரில் கடப்பாவில் உள்ள தர்காவிற்கு சென்று வந்தார். அப்போது தான் அந்த வீடியோ எடுக்கப்பட்டது, இதை தவறாக புரிந்து கொண்டு சிலர் சூர்யா மதம் மாறிவிட்டார் என்று செய்தி பரப்பி வருகின்றனர். சூர்யா மதம் எதுவும் மாறவில்லை, அந்த செய்தி தவறானது என்று சூர்யா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.