‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் பஞ்சாயத்தினால் பாதிக்கப்பட்ட 'சிவலிங்கா' படம் இதோ அதோ என்று இழுத்து கடைசியில் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப்போய்விட்டது.
மொட்ட சிவா கெட்ட சிவா படம் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு அடுத்த வாரம் வெளிவரும் என்று சொல்லி வருகின்றனர். உண்மையில் அடுத்த வாரம் இல்லை, அடுத்த மாதம் கூட படம் வராது என்று படத்துறையில் பேச்சு அடிபடுகிறது.
இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் ஒருவேளை 'சிவலிங்கா' படம் ஏப்ரல் மாதத்துக்கு முன்னதாகவே ரிலீசாக வாய்ப்பிருக்கிறது. மார்ச் மாதத்தில் நிறைய படங்கள் வெளிவருவதால் ஒருவேளை ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்தபடி ஏப்ரல் 14 அன்று வெளியானால் சிவலிங்க படத்துக்கு சிக்கல்தான்.
தனுஷ் தயாரித்து இயக்கி வரும் 'பவர் பாண்டி'யும் தமிழ் புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரவிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'பவர் பாண்டி' படம், சினிமா ஸ்டண்ட் நடிகர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
தனுஷின் இயக்கத்தில் வெளியாகும் முதல் படமான இதில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்க, பிரசன்னா, நதியா, சாயா சிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
அட்லி தயாரிப்பில் ஜீவா நடிக்கும் 'சங்கிலி புங்குலி கதவ தொற' சந்தானம் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்களும் தமிழ் புத்தாண்டு அன்று திரைக்கு வருகிறது. எனவே நிச்சயமாக சிவாலிங்காவுக்கு தியேட்டர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.