மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பர்மாவில் கலவரம் வெடித்தபோது அங்கிருந்து லட்சக்கணக்கான பேர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அவர்களில் நடிகை எஸ்.என்.பார்வதியும் ஒருவர். அவரது குடும்பம் பர்மாவில் வைர வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தது. கலவரத்தால் உயிர் பிழைத்தால் போதும் என்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு வந்தது எஸ்.என்.பார்வதி குடும்பம்.
அப்போது கையில் கொண்டு வந்திருந்த கொஞ்சம் வைரத்தை கொண்டு சென்னையில் வைர வியாபாரத்தை தொடங்கினார் எஸ்.என்.பார்வதியின் தந்தை. ஆனால் அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. அப்பா, அம்மா, இரண்டு தங்கை, ஒரு தம்பி. அடுத்த வேளை உணவுக்கே சிக்கலான வாழ்க்கை.
எஸ்.என்.பார்வதியின் பக்கத்து வீட்டுக்காரர் சண்முகம், மேடை கச்சேரிகளில் பாடுகிறவர். அவர் இவர்களது வறுமையை கண்டு "பார்வதி அழகாக இருக்கிறாள். நாடகத்தில் நடிக்க என் நண்பருக்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள் உங்கள் மகள் நடிக்க சம்மதித்தால் பணம் கிடைக்கும் உங்கள் கஷ்டம் தீரும்" என்றார். எஸ்.என்.பார்வதி நடிப்பதில் குடும்பத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை. என்றாலும் வறுமை அவரை நடிக்க வைத்தது. நிஜமான வைர நகைகள் போட்டு வலம் வந்த எஸ்.என்.பார்வதி கவரிங் நகைகள் போட்டு நடிக்க ஆரம்பித்தார்.
தீர்ப்பு கூறுங்கள் என்ற நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த எஸ்.என்.பார்வதி பிறகு பணம் தரும் பரிசு என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு நூற்றுக் கணக்கான படங்களில் காமெடி நடிகையாகவும் குணசித்ர நடிகையாகவும் நடித்தார். மகள் நடிகையானதை தாங்கிக் கொள்ள முடியாமலேயே அவரது தந்தை இறந்து போனார்.