திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

பிரபல கன்னட நடிகை நிவேதிதா. தமிழில் போர்களம், கதை, மார்கண்டேயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள நிவேதிதா டிசம்பர்-1 என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார்.
கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிவேதிதா. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையை கொண்டாட கோவா சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் மற்ற தனது நண்பர்களுக்காக அங்கு காத்திருந்திருக்கிறார். அப்போது இரவு 9 மணியளவில் கோவா கடற்கரையை சுற்றிப் பார்த்து திரும்பியிருக்கிறார். அப்போது போதையில் வந்த சில இளைஞர்கள் நிவேதிதாவை தவறான பெண் என்று கருதி அழைத்துள்ளனர். அவரது கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நிவேதிதா அங்குள்ள சிறிய ஓட்டலுக்குள் சென்றுள்ளார். அது ஒரு பார் அங்கும் குடிபோதையில் பலர் அமர்ந்திருந்தார்கள். அவர்களும் நிவேதிதாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்தும் தப்பி அறைக்கு திரும்பிய மறுநாளே பெங்களூர் வந்து விட்டார். கோவாவில் தனக்கு நேர்ந்த கொடுமையை இப்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார் நிவேதிதா.