ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இப்போது படம் எடுக்க வரும் புது இயக்குனர்கள் ஒரு நாளில் நடக்கும் கதை, பத்து மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதையெல்லாம் ஏதோ புதுமையான விஷயம் என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1976-ம் ஆண்டில் வெளிவந்த உறவாடும் நெஞ்சம் என்ற படம் 30 நிமிடத்தில் நடக்கும் கதையாக வந்தது.
கோடீஸ்வரன் வீட்டு மகன், ஏழை பெண்ணை காதலிப்பான். காதலுக்கு கோடீஸ்வர குடும்பம் எதிர்ப்பு தெரிவிப்பதால் சொத்து சுகம் வேண்டாம் என்று காதலியை திருமணம் செய்து கொண்டு ஒரு மில்லில் வேலை செய்வான். திடீரென மனைவிக்கு இருதய நோய் வர அவளை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பான். அவள் குணமாகமாலேயே திரும்பி வருவாள். இங்கு கணவன் ஒரு கொலை வழக்கில் தூக்கு தண்டனையாக நிற்பான். இருவரும் சந்தித்துக் கொள்ளும் அந்த 30 நிமிடமே கதை. அதற்குள் உணர்ச்சி போராட்டம், பிளாஷ்பேக், காதல் எல்லாமே இருக்கும். ஆனால் கதை நடக்கும் நேரம் 30 நிமிடங்கள்தான். நல்ல கதையம்சமும் உணர்ச்சி பெருக்கும் கொண்ட இந்தப் படம் வெற்றி பெறவில்லை.
இந்தப் படத்தை தேவராஜ்-மோகன் என்ற இரட்டையர்கள் இயக்கி இருந்தார்கள். சண்முகப்ரியன் கதை, திரைக்கதை எழுதியிருந்தார். ஸ்ரீ விஷ்ணுப்பிரியா கிரியேஷன் சார்பில் கந்தசாமி, தேவராஜ்-மோகன் தயாரித்திருந்தார்கள். சிவகுமார், சந்திரகலா, ஜெய்சங்கர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார்.