சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
பெரிய குளத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன், அந்தக் காலத்திலேயே நிறைய படித்தவர். சென்னை தொலைபேசி துறையில் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம். ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்சாரதி நடத்தி வந்த அமெச்சூர் நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்து வந்தார்.
நாடகத்தில் நடித்தவர்கள் சினிமாவில் நடிக்க சென்றபோது சுந்தர்ராஜனுக்கும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது. பல போராட்டத்திற்கு பிறகு 1962ம் ஆண்டு வெளிவந்த பட்டினத்தார் படத்தில் சோழ ராஜாவாக ஒரு சில காட்சிகளில் நடித்தார். அதன் பிறகு சுந்தர்ராஜன் நடித்து வந்த சர்வர் சுந்தரம் நாடகம் திரைப்படமானபோது அந்த நாடகத்தில் அவர் நடித்த அப்பா வேடம் சினிமாவிலும் கிடைத்தது.
ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்கும் ஆசையில் இருந்த சுந்தர்ராஜன் அப்பா வேடத்தில் நடிக்க தயங்கினார். அப்பா வேடத்தில் நடித்தால் தொடர்ந்து அப்பா வேடம்தான் கிடைக்கும் என்று நினைத்தார். "இந்த வேடம் உனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்" என்று கே.பாலச்சந்தர் கூறியதை அடுத்து அதில் நடித்தார். சுந்தர்ராஜன் பயந்தது போலவே அடுத்து அவருக்கு வந்ததெல்லாம் அப்பா வேடங்கள்தான்.
அப்போதுதான் கே.பாலச்சந்தர் தான் இயக்கிய மேஜர் சந்திரகாந்த் படத்தில் சுந்தர்ராஜனை ஹீரோவாக்கினார். ஆனாலும் அதில் அப்பா வேடம்தான். கண்டிப்பான ராணுவ அதிகாரி கேரக்டரில் அவர் நடித்திருந்தார். தன் மகன்களே தவறு செய்தாலும் தண்டிக்கிற கேரக்டர். அதில் சுந்தர்ராஜனின் நடிப்பு பரவலான பாராட்டை பெற்றது. அன்று முதல் தொலைபேசி சுந்தர்ராஜன், மேஜர் சுந்தர்ராஜன் ஆனார். ஆங்கிலமும், தமிழும் கலந்து பேசும் தனித்துவமான ஸ்டைலால் புகழ்பெற்றார்.