சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
ஏகப்பட்ட வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இருந்ததால் உயிரின் எடை 21 அயிரி படத்திற்கு 41கட் கொடுத்துள்ளனர் தணிக்கை குழுவினர். ட்ரீம் வேர்ல்டு மூவிஸ் சார்பில் ஏகன் நாயகனாகவும், ஹீரோவாகவும் அவதரித்து இருக்கும் படம் உயிரின் எடை 21 அயிரி. பலபேரின் உயிரை வாங்கி, ஊரையே நடுங்கு வைத்த தாதா ஒருவன், ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையாகி கிடக்கும்போது அந்த உயிரின் மதிப்பை உணர்கிறான் என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் ஏகப்பட்ட ஆபாச காட்சிகளும், வன்முறைகளும் நிறைந்து காணப்படுவதாக கூறி, 41 இடத்தில் கட் போட்டுள்ளனர். மேலும் இந்த வெட்டுகளோடு படத்தை வெளியிடலாம். இல்லையேல் படத்தை வெளியிடக் கூடாது என்று தணிக்கைக் குழு கண்டிப்பாக கூறிவிட்டனர்.தணிக்கை துறையினரின் இந்த கட்டை கடுமையாக எதிர்த்துள்ளார் ஏகன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வரும் 5ம் தேதி படத்தை வெளியிடுவதாக இருந்தோம். ஆனால் தணிக்கை குழு 41 இடத்தில் கட் கொடுத்துள்ளதால் அந்த பணிகளை முடித்து 17ம் தேதி வெளியிட தீர்மானித்திருக்கிறோம். பெண்களின் தலைமுடியை பிடித்து இழுக்கும் காட்சிக்கு கூட கட் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதைவிட மோசமான காட்சிகளுக்கு எல்லாம் சென்சார் அனுமதி கொடுத்துள்ளனர். நாங்கள் சின்ன தயாரிப்பாளர் என்பதால் எங்களால் எதிர்த்து எதுவும் கேட்க முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறார்.