Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2017ல் நம்பர் ஒன்: விஜய் சேதுபதியா? ஜி.வி.பிரகாஷா?

04 நவ, 2016 - 02:50 IST
எழுத்தின் அளவு:
2017-no-1-actor-:-vijay-sethupathi-or-g.v.prakash

இந்த ஆண்டு ஜி.பிரகாஷ் நடித்த பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்கள் வெளிவந்துள்ளது. இந்த மாதம் கடவுள் இருக்கான் குமாரு வெளிவருகிறது. எனவே 2016ல் ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்கள் மூன்றுதான். ஆனால் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே புரூஸ் லீ வெளிவருகிறது. தொடர்ந்து தற்போது அவர் நடித்து வரும் அடங்காதே, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படம், சசி இயக்கத்தில் நடிக்கப்போகும் 4ஜி, இயக்குனர்கள் ராம்பாலா, பாண்டிராஜ் படங்கள் உருவாக தயாராக இருக்கிறது. இதுதவிர இன்னும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒபந்தமாகியிருக்கிறார். ஆக மொத்தம் 2017ல் ஜி.பி.பிரகாஷ் நடிப்பில் 8 படங்கள் வெளிவருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு இதுவரை சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என 6 படங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த மாதம் புரியாத புதிர் வெளிவருகிறது. எனவே விஜய் சேதுபதி 7 படங்களில் நடித்து இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்து விட்டார்.


அடுத்த ஆண்டு அவருக்கு இடம் பொருள் ஏவல், வட சென்னை, கவண், விக்ரம் வேதா, ரேணிகுண்டா பன்னீர் செல்வம் படம், சி.பிரேம்குமார் படம், தியாகராஜன் குமாரராஜா படம் என 7 படங்கள் வெளிவருகிறது. ஒன்றிரண்டு புதிய படங்களும் இதில் சேரலாம். எனவே தற்போதைய நிலவரப்படி, ஜி.வி.பிரகாஷ்குமார் 8 படத்துடனும், விஜய் சேதுபதி 7 படத்துடனும் 2017ம் ஆண்டை எதிர்கொள்கிறார்கள். யார் அதிக படத்தில் நடித்து முதல் இடத்தை பிடிப்பார்கள் என்பதை இப்போதே கூற முடியாது. ஆனால் இருவரில் ஒருவருக்குத்தான் முதலிடம் என்பது மட்டும் உறுதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)