ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
படத்தின் தலைப்பையே ஒரு குறியீடாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் ஷாம் நடிக்கும் புதிய படத்திற்கு. ஆறு என்ற எண் வடிவிலான எரியும் மெழுகுவர்த்திதான் அந்த படத்தின் தலைப்பு. இந்த தலைப்பின் அருகே ஆறு மெழுகுவர்த்திகள் அல்லது சிக்ஸ் கேன்டில்ஸ் என்ற எந்த சப் டைடிலும் இடம்பெறாதாம். உலக சினிமாவில் படத்தின் தலைப்பை குறியீடாக கொடுத்தது இதுதான் முதல் முறை என்ற பெருமையுடன் உருவாகும் இப்படத்தில், ஆறு வருடங்கள், ஆறு மாதங்கள், ஆறு வாரங்கள், ஆறு நாட்கள், ஆறு மணிநேரம், ஆறு நிமிடம், ஆறு நொடி என்று அனைத்தும் ஆறில் நடப்பது போல இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த ஆறு மேட்டரை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
இதில் ஷாம் ஆறு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார். தமிழகத்தில் துவங்கும் கதை ஆந்திரா, மகராஷ்ட்ரா, போபால், டில்லி, கோவா, கான்பூர் என்று பயணித்து இறுதியாக கோல்கட்டாவில் முடிகிறது. இந்த மாநிலங்களில் இடம்பெறும் காட்சிகள் அனைத்திலும் அந்த அந்த மாநில நாடக கலைஞர்களையும் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்களாம். பல சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறா£ ஜெயமோகன். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இந்த படத்திற்காக ஷாம், 25 கிலோ எடையை குறைத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.