Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தாவை டார்கெட் பண்ணும் கீர்த்தி சுரேஷ்!

11 செப், 2016 - 09:29 IST
எழுத்தின் அளவு:
keerthi-suresh-targets-samantha-in-vijai-movies

விஜய்யுடன் தான் நடித்து வரும் பைரவா படத்தை தனது கேரியரில் மிக முக்கியமான படமாக நினைக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதனால் இந்த படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்த நேரத்தில் எந்த படங்களையும் அவர் ஏற்கவில்லை. பைரவா படத்தில் நடித்து முடித்த பிறகு மற்ற படங்களில் நடிப்பேன் என்று உறுதியாக கூறி வந்தார். அதன்காரணமாக அவர் கமிட்டான தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகளில்கூட இன்னும் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில மாதங்களாகவே பைரவா படப்பிடிப்பில்தான் பிசியாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.


மேலும், தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட பைரவா படத்தில் விஜய் வில்லன்களுடன் மோதிக்கொள்ளும் சண்டை காட்சி தற்போது ராஜமுந்திரியில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், சில சேஸிங் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளது. இதையடுத்து பைரவா படத்தின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 5 பாடல்களில் மூன்று பாடல்களை படமாக்கி விட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு பாடல்களை ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.


முன்னதாக, இந்த இரண்டு பாடல்களிலும் விதவிதமான காஸ்டியூமில் ஜொலிக்கப்போகும் கீர்த்தி சுரேஷ், நடனத்திலும் விஜய்யுடன் கத்தி, தெறி படங்களில் சமந்தா ஆடியதற்கு இணையாக தானும் நடனமாடி ரசிகர்களிடம் அபிமானத்தை பெற்று விட வேண்டும் என்பதற்காக, அந்த பாடல்களின் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னதாக ரிகர்சல் பார்த்துக்கொண்டு களமிறங்கவும் முடிவெடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)