மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
1984ம் ஆண்டு வெளிவந்த படம் நல்லவனுக்கு நல்லவன். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினி, ராதிகா ஹீரோ, ஹீரோயின். துளசி, மேஜர் சுந்தர்ராஜன், விசு, ஒய்.ஜி.மகேந்திரன், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். பாபு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்தப் படம் ஒரு தொழிலாளியின் கதை. ரஜினி தாதாவாக இருந்து பின்பு மனம் திருந்தி தொழிலாளியாக வேலை செய்வார். நஷ்டத்தில் இயங்கிய தொழிற்சாலையை லாபமாக மாற்றுவார். ஆனால் முதலாளி மகன் குடியும் குடித்தனமுமாக இருந்து கேட்பார் பேச்சு கேட்டு தொழிலாளர்களை எதிர்ப்பார் துரோகியின் பேச்சை கேட்டு அப்பாவின் சொத்துக்களை எழுதி வாங்குவார். பின்பு அந்த துரோகிகளே அவரை தீர்த்துக்கட்டி சொத்துக்களை அபகரிக்கும்போது ரஜினி அவரை காப்பாற்றுவது கதை.
இந்த கதையில் முதலாளி மகனாக ஒரு ஹீரோவை நடிக்க வைத்தால் புதுமையாக இருக்கும் என்று கருதிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அப்போது கொஞ்சம் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த கார்த்திக்கை அணுகினார். அவரோ கோடி ரூபாய் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
ஆனால் ஏவிஎம். சரவணன் கார்த்திக்கிடம் பக்குவமாக பேசினார் "நீங்கள் நல்லவர்தான் மற்றவர்கள் உங்களை தவறாக வழிகாட்டி கெட்டவனாக்குகிறார்கள். அதனால் நீங்கள் வில்லன் இல்லை. கடைசியில் திருந்தியும் விடுகிறீர்கள். அதனால் இது பாசிட்டிவான கேரக்டர்தான். அதோடு இந்தப் படத்தில் நீங்கள் நடித்தால் அடுத்து உங்களை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறோம். அந்தப் படத்தையும் எஸ்.பி.முத்துராமன் இயக்குவார்" என்று வாக்களித்தார். அதன் பிறகே கார்த்திக் நல்லவனுக்கு நல்லவனில் நடித்தார்.
நல்லவனுக்கு நல்லவன் வெற்றிப்படடமாக அமைந்து 150 நாட்கள் ஓடியது. ஏவிஎம் சரவணன் சொன்ன மாதிரி ஏவிஎம் தயாரிப்பில் நல்லதம்பி படம் தயாரிக்கப்பட்டது. அதனை எஸ்.பி.த்துராமனே இயக்கினார். நல்லவனுக்கு நல்வவன் படத்திற்கு பிறகு கார்த்திக் வில்லனாக நடித்த படம் அனேகன்.