ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவரான உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‛செவாலியே' விருது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து கமல்ஹாசனுக்கு ஏராளமானபேர் வாழ்த்து சொன்னார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி பக்கத்து மாநில முதல்வரான பினராயி விஜயன் வரை பலரும் வாழ்த்து சொன்னார்கள். தினமலர் சார்பாக கமலுக்கு வாழ்த்து சொல்ல தினமலர் இணையதளத்திலும் வாழ்த்து பகுதி ஒன்று துவக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமான வாசகர்கள் கமலுக்கு வாழ்த்து சொல்லி அவரை வாழ்த்து மழையில் நனையவிட்டு விட்டனர்.
இந்நிலையில், தினமலரில் வாசகர்கள் சொன்ன வாழ்த்துக்கள் அனைத்தும் பிரிண்ட்-அவுட் எடுக்கப்பட்டு அதை அப்படியே நடிகர் கமல்ஹாசனிடம் காண்பிக்கப்பட்டன. கமலும் அதை பார்த்துவிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன் அவரே தன் கைப்பட ‛‛தினமலர் வாசகர்களின் மாறா அன்பிற்கு நன்றி - கமல்ஹாசன்'' என்று எழுதி கொடுத்தார். அதை மேலே உள்ள கமல் புகைப்படத்துடன் இணைத்துள்ளோம்.