சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கவுதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஸ்ருதியின் ஆடை விவகாரத்தில் கவுதமி தலையிடுவது ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை, என்றும் ஸ்ருதிக்கும், கவுதமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஸ்ருதி தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...
தனக்கென்று ஒரு தனி ஸ்டைல்... தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம். தன்னுடைய தந்தையின் சபாஷ் நாயுடு" படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கவுதமி.
ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றார் போல், கதாப்பாத்திரத்தோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கவுதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார். ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் படத்தின் கதைக்கு ஏற்பவும், பாத்திர படைப்புக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்து செயல்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு மாடர்ன் பெண் எப்படி இருப்பாரோ, அதேப்போல் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் இருப்பார்.
சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி, கவுதமி இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதி மற்றும் கவுதமி இருவருக்கும் நடுவே எப்போதும் ஒரு பரஸ்பரமான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கவுதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது..."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.