'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னி. 'சைவம்' படத்தின் மூலம் தேசிய விருதினை பெற்றார். அவர் தற்போது பிறந்த நாள் வாழ்த்து பாடலை தமிழில் பாடி ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.
பொதுவாக பிறந்த நாளில் “ஹேப்பி பெர்த் டே டூ யூ” என்ற ஆங்கில பாடலைத்தான் பாடுவார்கள். இதற்கு இணையான தமிழ் பாடல் இல்லாமல் இருந்தது. திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி “நீண்ட காலம், நீடு வாழ வேண்டும்...” என்ற பாடலை எழுதி அதனை தான் கலந்து கொள்ளும் பிறந்த நாள் விழாக்களில் பாடி வந்தார். இதைக் கேட்ட பலரும் இதனையே ஒரு இசை ஆல்பமாக வெளியிட்டால் மற்றவர்களும் பாடுவார்களே என்ற சொல்ல, தன் ஆசையை இசை அமைப்பாளர் அருள் கரோலியிடம் கூறியுள்ளார்.
இவர்தான் உத்ரா உன்னியை 'பிசாசு' படத்தில் “நதி போகும் கூழாங்கல்...” என்ற பாடலை பாட வைத்தவர். அருள் குரோலி இசை அமைக்க உத்ரா உன்னியின் தேனிசை குரலில் தமிழ் பிறந்த நாள் பாடல் பிறந்தது. இந்த பாடல் அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடந்த தமிழ் சங்க பேரவை விழாவில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை 'வலைத்தமிழ் டாட் காம்' என்ற இணையதளத்தில் கேட்கலாம். பதிவிறக்கம் செய்யலாம்.
“இந்த பாடல் என் மகள் எனக்காகவே பாடியது போல இருக்கிறது” என்று நெகிழ்கிறார் உன்னி கிருஷ்ணன். “இனி பிறந்த நாட்களில் தமிழ் பாடல் ஒலிக்கட்டும்” என்று மகிழ்கிறார் அறிவுமதி.