Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் இணைகிறது மிருதன் கூட்டணி

12 ஜூன், 2016 - 04:06 IST
எழுத்தின் அளவு:
Muruthan-team-again-join-hands

யாராலும் உடைக்க முடியாத பேங்க லாக்கர் கதை (நாணயம்), ராணுவ நாய் ஒரு செயின் மர்டர் சைக்கோவை துப்பறியும் கதை (நாய்கள் ஜாக்கிரதை), சோம்பி கதை (மிருதன்) இப்படி ஹாலிவுட்டில் ஹிட் அடிக்கும் சமாச்சாரங்களை நம்ம ஊர் ரசிகர்களுக்கு தரும் கில்லாடியான ஷக்தி சவுந்தர்ராஜன் மீண்டும் ஜெயம்ரவியுடன் படம் இணைகிறார்.

அடுத்து எந்த ஹாலிவுட் கதையை உருவி திரைக்கதை அமைத்திருக்கிறார் என்பதை படத்தின் பர்ஸ்ட் லுக்கிலேயே கண்டுபிடித்து விடலாம். அது இருக்கட்டும் இப்போது ஷக்தி சவுந்தர்ராஜனும், ஜெயம் ரவியும் மீண்டும் இணைவது முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டில், ஹீரோயின். மற்ற டெக்னீஷியன்கள் எதுவும் முடிவாகவில்லை. படத்தை நேமிசந்த் ஜெபக் புரொடக்ஷன் சார்பில் வி.ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கிறார். இந்த நிறுவனத்தின் 10வது தயாரிப்பு இது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)