ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் |
ஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக எம்.பி., கனிமொழியை நடிகை குஷ்பு சந்தித்தார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது, ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று கூறிய நடிகை குஷ்பு, இதேபோன்ற சூழ்நிலையை தானும் சந்தித்திருப்பதாகவும், கனிமொழி இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். ஜாமின் மனு மீதான விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கனிமொழி நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அப்போது நடிகை குஷ்பு, கனிமொழிக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சிறை வாழ்க்கை பற்றியும், தமிழக நிலவரம் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு குஷ்பு ஆறுதல் கூறினார்.