Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிஆர் சொல்லும் கூடா நட்பு, விஷக்கிருமி யார் ?

20 டிச, 2015 - 03:32 IST
எழுத்தின் அளவு:
T.Rajendar-on-beep-song

பீப் சாங் குறித்து அடுத்த கட்ட நாடகத்தை நிறைவேற்றத் தயாராகிவிட்டார்கள். காலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிம்பு ஒரு பக்கம் பேட்டி அளிக்க, மறுபக்கம் சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தர் அவருக்குச் சொந்தமான இணையதளத்தில் ஒரு வீடியோ அறிவிப்பை வெளியிடுகிறார். இருவருமே அந்தப் பாடலை உருவாக்கியதைப் பற்றி மறுக்கவில்லை. அந்தக் குறிப்பிட்ட வார்த்தை பீப் செய்யப்பட்டிருப்பது சினிமாவில் இருக்கும் ஒரு முறை என்றும் அதை யாரோ திருடி வெளியிட்டுவிட்டார்கள் என்றும் பொதுவான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

டி.ஆரின் வீடியோ அறிவிப்பில் கூடா நட்பு இருந்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். அதோடு ஆளும் கட்சிக்கு ஆதரவான பத்திரிகையின் இணையதளத்திலேயே சில விஷக்கிருமிகள் நுழைந்து கருத்துக் கணிப்பை வெளியிடும் போது இந்தப் பாடல் திருடப்படுவதை எப்படித் தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.


அப்படி டி.ஆர் குறிப்பிட்ட அந்தக் கூடா நட்பு யார் என்பதையும், அந்த விஷக் கிருமிகள் யார் என்பதையும் அவரே வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். இப்படித்தான் வாலு படம் வெளிவருவதற்கு சிம்புவைப் பிடிக்காத சிலர் பட வெளியீட்டையே தடுக்கிறார்கள் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். கடைசி வரை அவர்கள் யார் என்பதை அவர் சொல்லவேயில்லை.


பீப் சாங் பற்றிய இன்றைய டிஆரின் வீடியோ அறிவிப்பும் அப்படியேதான் உள்ளது. திருடி வெளியிட்டதுதான் தப்பு, அந்தப் பாடலை உருவாக்கியது தப்பு இல்லை என்ற கோணத்திலேயே அவருடைய அறிவிப்பும், சிம்புவின் பேட்டியும் இருப்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)