Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நம்புங்கள்.. இன்று ஆர்யா நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ்..!

28 ஆக, 2015 - 10:37 IST
எழுத்தின் அளவு:
Aryas-movies-release-today

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் ஆர்யா 'நடித்த 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ரிலீஸ் ஆனது.. இனி அடுத்த வாரம் செப்-4ல் தான் ஆர்யா நடித்த 'யட்சன்' வெளியாக இருப்பதாக தகவல்.. ஆனால் இன்று அவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது என்றால் எப்படி இது சாத்தியமானது என்கிற ஆச்சர்யம் ஏற்படுகிறது தானே..? நம்புங்கள்.. கெஸ்ட் ரோல் மன்னன் ஆர்யா நினைத்தால் எதுவும் சாத்தியம் தான்.


இன்று விக்ராந்த் நடித்த 'தாக்க தாக்க' படம் ரிலீசாகியுள்ளது இல்லையா.. அதில் விஷால், விஷ்ணு ஆகியோருடன் சேர்ந்து ஆர்யாவும் ஒரு பாடலில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.. ஆக இந்தப்படமும் அவரது கணக்கில் தான் சேரும். அதேபோல இன்று மலையாளத்தில் 'டபுள் பேரல்' என்கிற படம் ஓணம் ஸ்பெஷலாக ரிலீசாகியுள்ளது. இதில் பிருத்விராஜ், ஆர்யா இருவரும் தான் கதாநாயகர்கள்.. ஆக ஆர்யாவுக்கு இந்த இரண்டு படங்களும் இன்று ஓணம் ஸ்பெஷல் ரிலீஸ் என்று தாராளமாக சொல்லலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)