ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. 87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன் 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். .
வாழ்க்கை வரலாறு: இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளியில் 1928 ஜூன் 24ல் பிறந்தார். அவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.