தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் |
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்விழா கவிஞர்கள் திருநாளாக நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞர் சல்மா விருதும் பரிசும் பெற்றார். இவ்விழாவில் பேசிய கபிலன், தந்தை வைரமுத்துவை மேடையில் வைத்துக் கொண்டே அப்பா வழியில் தங்களால் செல்லமுடியாது என்றார்.
கபிலன் வைரமுத்து பேசும் போது "நாங்கள் அப்பாவின் பிறந்தநாள் விழாவை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். வழங்கப்படுகிற பரிசுப் பொருள்களையும் பார்த்து வருகிறோம் எல்லாமே மாறியுள்ளன. இப்போது தலைமுறை மாறிவிட்டது. போன தலைமுறையோடு இந்ததலைமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று உலக மயமாகி வணிக நிறுவனங்கள் ஒரே மாதிரியான இளைஞர்களை தயாரித்து வருகின்றன. அவர்களுக்கு நிதி முக்கியம் நிம்மதி முக்கியமில்லை. அறிவு முக்கியம் அன்பு முக்கியமில்லை.
அதனால் அப்பாவைப் பின்பற்றுவது என்பது முடியாத ஒன்றாக இருக்கிறது. அவருக்கு பேச்சுத்தமிழ் , எழுத்துதமிழ், கவிதைத்தமிழ் பாடல்தமிழ், மேடைத்தமிழ், விஞ்ஞானத் தமிழ் என்று பல தமிழ் நடைகள் இருக்கின்றன. இதை எல்லாம் எங்களால் பின்பற்ற முடியாது அவ்வளவு சிரமம். எனவே அவர் வழியில் நாங்கள் போக முடியாது." இவ்வாறு கபிலன் வைரமுத்து பேசினார்.
பிறகு பேசிய வைரமுத்து,என் பிள்ளைகளான உங்களுக்கு நான் விட்டுச் செல்கிற சொத்து பெரிதாக எதுவுமில்லை இந்த மனித உறவுகள்தான். இவர்களை அருகில் வைத்து உறவாடினால் அனைத்தும் கிடைக்கும். ஏனென்றால் மனிதர்களால் ஆனது தான் வாழ்வு" என்று அறிவுரை கூறினார்.