Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷாமுக்கு கிடைத்த பாராட்டு!

21 மே, 2015 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Lot-congrats-to-Shaam

2000-ம் வருடத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்-ஜோதிகா நடித்த குஷி படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக நடித்தவர்தான் ஷாம். ஆனால் அதற்கடுத்த ஆண்டிலேயே மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய 12பி என்ற படத்தில் ஹீரோவாகி விட்டார் ஷாம். அதோடு, அப்போதைய முன்னணி ஹீரோயின்களான சிம்ரன்-ஜோதிகா இருவரும் அவருக்கு ஜோடிகளாக கிடைத்தனர். எந்த புதுமுக ஹீரோக்களுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு அப்போது ஷாமுக்கு கிடைத்தது. ஆனபோதும், அவரது எதிர்காலம் சினிமாவில் எதிர்பார்த்தபடி பிரகாசமாக அமையவில்லை.


இருப்பினும், லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே போன்ற படங்கள் ஷாமுக்கு ஓரளவு பெயர் வாங்கிக்கொடுத்தன. அதன்பிறகு தமிழில் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், தெலுங்கு, கன்னடம் என்று பரவலாக நடிக்கத் தொடங்கி விட்ட ஷாம், ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.


இந்தநிலையில், இயற்கை படத்திற்கு பிறகு மீண்டும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடித்துள்ள புறம்போக்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஷாம். அதிலும் தொடக்கம் முதல் கடைசி வரை ஒரேமாதிரியான இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அந்த இயல்பான நடிப்பைப்பார்த்த கோலிவுட்டிலுள்ள சில ஹீரோக்களும், இயக்குனர்களும் ஷாமுக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்து வருகிறார்களாம்.


அதில் சில இயக்குனர்கள் அவரை அதிரடியான கேரக்டர்களில் நடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்களாம். அதனால், நாம் விரும்புவதை விட மற்றவர்கள் நம்மை எந்த மாதிரியாக திரையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்பதை உணர்ந்து விட்ட ஷாம், இனிமேல் ஹீரோ வேடத்துக்காக காத்திருக்காமல் மாறுபட்ட நடிகராக வலம்வரத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)