நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
பிரபுதேவா -மீனா நடித்த டபுள்ஸ் படத்தில் இசையமைப்பாளர் ஆனவர் ஸ்ரீகாந்த் தேவா. அதையடுத்து, ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்துக்கு இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். பின்னர் விஜய்யின் சிவகாசி, அஜித்தின் ஆழ்வார் என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்தார். இருப்பினும் சமீபகாலமாக மார்க்கெட்டில் அவர் பின்தங்கியிருக்கிறார். அதனால் சிறிய படங்களாக இசையமைத்து வரும் ஸ்ரீகாந்த்தேவாவை, முன்பு தான் இயக்கிய ஈ படத்தில் இசையமைக்க வைத்த எஸ்.பி.ஜனநாதன், தற்போது இயக்கியுள்ள புறம்போக்கு படத்தில் பின்னணி இசையமைக்கும் வாய்ப்பினை மட்டுமே கொடுத்து விட்டு, பாடல்களுக்கு வர்ஷன் என்ற புதியவரை பயன்படுத்தியிருக்கிறார்.
இதுபற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில், நான் எத்தனையோ படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் எஸ்.பி.ஜனநாதனின் இந்த புறம்போக்கு என்னும் பொதுவுடமை எனக்கு மைல்கல் படமாகும். அதனால் இந்த படத்தின் பின்னணி இசையை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக கொடுத்திருக்கிறேன்.
அதற்கு காரணம், இந்த படமும் எனக்கு ஹாலிவுட் படம் பார்த்த உணர்வைத்தான் தந்தது. அதனால் பின்னணி இசையையும் சாங் போன்று கொடுத்துள்ளேன். அதற்கு பூலோகம் பட டைரக்டர் கல்யாண், நான் ரீரெக்கார்டிங் பண்ணும்போது என்கூடவே இருந்து உதவி செய்தார் என்று கூறும் ஸ்ரீகாந்த்தேவா, ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இருப்பது ஆரோக்யமான விசயம்தான். இந்த மாதிரி சூழ்நிலையில்தான் நம்முடைய தனித்திறமை மற்றவர்களின் கவனத்துக்கு வரும். ஆக, இந்த படத்தில் இருந்து எனக்கு நல்ல நேரம் ஸ்டார் ஆயிடுச்சு என்றே நினைக்கிறேன் என்கிறார்.