Advertisement

சிறப்புச்செய்திகள்

ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷங்கர் படத்தில் நடிக்க திலீப்புக்கு தடைபோட்ட மகள்...!

11 மே, 2015 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Dhilips-daughter-Meenakshi-restrict-to-Dhilip

மலையாள நடிகர் திலீப் தனது மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தபின்னரும் கூட அவர்களது மகள் மீனாட்சி தாயுடன் செல்லாமல் தந்தையுடனேயே தங்கிவிட்டார். பொதுவாக பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அப்பா மேல் பாசம் அதிகமாக இருக்கும் அல்லவா..?. அதனால் தனது மகள் மீனாட்சி பற்றி பேசினால் எவ்வளவு கவலையில் இருந்தாலும் திலீப்பின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்து விடுகிறது.. திலீப்பின் மகள் மீனாட்சி எந்த நிலையிலும் தனது தந்தையை விட்டுக்கொடுக்க விரும்பாதவர்.. அது திரையிலும் சரி.. நிஜத்திலும் சரி.. சில வருடங்களுக்கு முன்பு திலீப்பை தான் இயக்கும் நண்பன் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தாராம் இயக்குனர் ஷங்கர். அதுபற்றி மகளிடம் திலீப் சொன்னபோது, அமீர்கான் நடித்த கேரக்டரில் நடிக்கிறீர்களா என கேட்க, இல்லை என தலையாட்டியுள்ளார் திலீப். அப்படியானால் மற்ற இரண்டு கேரக்டர்களில் ஏதாவது ஒன்றா என கேட்க, அதற்கும் மறுத்து தலையாட்டியுள்ளார் திலீப்.


உடனே தனது தந்தையிடம் அந்த மூன்று கேரக்டர்கள் தவிர, நான்காவதாக எந்த கேரக்டரில் நடிக்க கூப்பிட்டாலும் நீங்கள் போகக்கூடாது என்றும் அப்படி மீறி நடித்தால் உங்களுடன் பேசமாட்டேன் என்றும் உத்தரவு போட்டுவிட்டாராம். தனது தந்தை மற்றவர்களால் கிண்டல் செய்யப்படும் கேரக்டராக இறங்கி நடிப்பதை மகள் விரும்பவில்லையாம். அதனாலேயே ஷங்கர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டாராம் திலீப்.. சமீபத்தில் திலீப் தனது மகளைப்பற்றி பெருமிதமாக ஒரு பேட்டியில் கூறியபோது இந்த விஷயம் வெளிவந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)