பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சுந்தர் சி இயக்கத்தில் நடித்த 'ஆம்பள' படம் படு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அடுத்து வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற வெறியோடு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' படத்தில் நடித்து வருகிறார் விஷால். வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஒன்றரை கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாதிக்கும் மேல் முடிவடைந்துவிட்டது. இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி' படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்கவிருந்தார் விஷால். ஆனால் நிதி சிக்கலால் லிங்குசாமி. எனவே அவரது தயாரிப்பில் நடிப்பது ரிஸ்க் என்று நினைக்கும் விஷால், அந்தப் படத்தை தற்றி வைத்துவிட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.
சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்கும் 'ஹைக்கூ' படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ். அதோடு சிம்பு, நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தையும் இயக்கினார். இப்படத்தின் வேலைகளும் இன்னொருபுறம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்த இரண்டு படங்களும் முடிந்ததும் விஷால் நடிக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கவிருக்கிறார் பாண்டிராஜ். விஷாலின் 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது முழுக்க முழுக்க காமெடி சப்ஜெக்ட்டாம்.