Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பக்குவம் அடைந்து விட்டேன்: ஹன்சிகா

04 மே, 2015 - 02:55 IST
எழுத்தின் அளவு:
Hansika-Motwani-interview

தமிழ் சினிமாவில் இப்போது நம்பர் ஒன் நடிகை என்று யாரும் கிடையாது. ஆனாலும் நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் ஆகியோரை முன்வரிசையில் ஓடிக் கொண்டிருப்பவர்கள் என்று குறிப்பிடலாம். அவர்களில் முக்கியமானவர் ஹன்சிகா. அவர் நடித்த படம் ஓடுகிறதோ இல்லையோ. இன்றைய ரசிகன் படம் முழுக்க ஹன்சிகாவை ரசித்துவிட்டு வருகிறான் என்பது உண்மை. வாலு, வேட்டை மன்னன், உயிரே உயிரே, இதயம் முரளி, ரோமியோ ஜூலியட் என கை நிறைய படங்களோடு பிசியாக இருக்கிறார் ஹன்சிகா. முன்பெல்லாம் ஹன்சிகாவுக்கு பதில் அவரது அம்மாதான் நிறைய பேசுவார். இப்போதெல்லாம் மீடியாக்கள் தொடர்பு கொண்டால் ஹன்சிகாவே வந்து "ஹலோ எப்படி இருக்கீங்க" என்ற நலம் விசாரிப்போடு ஆரம்பிக்கிறார். அத்தனை பக்குவம் வந்து விட்டது.


எப்படி வந்தது இந்த பக்குவம்? ஹன்சிகாவில் பதில் இது


சினிமாவுக்கு நான் வந்தது குழந்தை நட்சத்திரமாகத்தான். 7 வயதில் கேமரா முன்னாடி நின்றேன். அப்போது விளையாட்டு பிள்ளை. 15 வயதில் இந்திப் படத்தில் ஹீரோயின் ஆனேன் அது பக்குவம் இல்லாத வயசு. தெலுங்கு, தமிழில் தொடர்ந்து நடித்தேன். இந்த காலகட்டம் எனக்கு முக்கியமானதாக இருந்தது. எனது அம்மா கூடவே இருந்து அம்மாவாக, ஆசிரியராக, வழிகாட்டியாக இருந்து வாழ்வில் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார். நான் செய்த சிறு சிறு தவறுகளிலிருந்தும் என்னை காப்பாற்றி கை பிடித்து அழைத்து வந்தார். இத்தனைக்கும் பிறகு பக்குவம் வராவிட்டால் எப்படி? முன்பெல்லாம் நான் கேட்டது கிடைக்க வேண்டும். என் பேச்சை எல்லோரும் கேட்க வேண்டும் இல்லாவிட்டால் கோபம் வரும். ஆனால் இப்போது யார் என்ன சொன்னாலும் கோபம் வருவதில்லை. எதையும் நிதானித்து செய்கிறேன். கிடைக்காத பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. இப்படி நான் ரொம்பவே பக்குவமாயிட்டேன்.


ஆனால் தமிழ் பேச இன்னும் சிரமப்படுறீங்களே...?


கூடவே இருப்பது அம்மா. அவர்களுக்கு தமிழ் தெரியாது. யூனிட்டில் இருப்பவர்கள் என்னிடத்தில் விஷயத்தை வேகமாக கன்வே பண்வதற்காக ஆங்கிலத்தில் பேசிவிடுகிறார்கள். நானாக எப்போதாவது டி.வி.பார்த்தோ, குழந்தைகளோடு பேசியோதான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில வருடங்களில் முழுமையாக பேசி விடுவேன் என்று நினைக்கிறேன். தமிழ் பேச முடியாவிட்டாலும் மற்றவர்கள் பேசுவதை தெளிவாக புரிந்து கொள்வேன்.




அழகா இருக்கீங்க, உங்களுக்குன்னு ரசிகர்கள் இருக்காங்க. ஆனால் ஒரு நடிகையா என்ன சாதிச்சிட்டதா நினைக்கிறீங்க?


எங்கோ வட நாட்டில் இருந்து வந்த என்னை கோவில் கட்டுகிற அளவுக்கு இந்த மக்கள் நேசிக்கிறாங்களே இதைவிட வேறென்ன சாதனை வேண்டும். கனமா கேரக்டரில் நடிக்கவில்லை என்கிறீர்களா? அப்படியான வாய்ப்பு வரட்டும் நானும் நடிக்கிறேன். அரண்மனை படத்தில் பேயாக நடித்தேனே கவனிக்கவில்லையா-. வித்தியாசமான வேடங்கள் வந்தால் அதை நான் தவிர்ப்பதில்லை. ஆனாலும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் என்னை கமர்ஷியல் ஹீரோயினாகத்தான் பார்க்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்.


பாலிவுட்டிலிருந்து கோலிவுட் வந்தீர்கள். மீண்டும் பாலிவுட் செல்லும் ஐடியா இருக்கிறதா?


இப்போதைக்கு இல்லை. தென்னிந்திய படங்கள்தான் எனக்கு கம்பர்டபிளாக இருக்கிறது. அதோடு தொடர்ந்து படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. வருடத்திற்கு நான்கைந்து படங்கள் நடிக்கிறேன். இந்தியில் இரண்டு படங்களுக்கு மேல் நடிக்க முடியாது. அதோடு தென்னிந்திய ரசிகர்களுக்கு என்னை பிடித்திருக்கிறது. நிறைய இந்தி வாய்ப்புகள் வருகிறது. ஆனாலும் இங்கு இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. அதன் பிறகு இந்திப் படங்களில் நடிக்கலாம்.




மல்டி ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்களே?


ஒரு விஷயம் சொல்லட்டுமா. நான் கதை கேட்கும்போது இந்த படத்தின் ஹீரோ யார் என்று கூட கேட்பதில்லை. கதை பிடித்திருக்கிறதா, எனக்கு தரப்படும் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா என்பதை மட்டும்தான் பார்ப்பேன். மான்கராத்தே படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் என்பது நான் ஒப்புக் கொண்ட பிறகுதான் தெரியும். அரண்மனை படத்தில் என் கேரக்டரே இடைவேளைக்கு பிறகுதான் வரும். அதில் நிறைய ஹீரோயின்கள் நடித்தார்கள். ஆனால் படம் முடிந்து செல்லும்போரு நான்தான் மக்கள் மனதில் இருந்தேன். அதுதான் எனக்கு வேண்டும்.




உங்கள் தத்து குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?


இப்போது 30 குழந்தைகள். சந்தோஷமாக இருக்கிறார்கள். இப்போது எல்லோருக்கும் எக்ஸாம் நடக்குது. பிசியா இருக்கிறார்கள். அவர்களுக்கு ஹோம் கட்ட இடம் வாங்கியிருக்கிறேன். சீக்கிரம் பில்டிங் வேலை ஆரம்பிக்கணும்.


அம்மா துணை மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா?


என்ன கேட்க வருகிறீர்கள் என்பது தெரிகிறது. இப்போதைக்கு அம்மா துணை மட்டும்போதும். அடுத்த துணை பற்றி இன்னும் சில வருடங்களுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)