Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீரியஸ் காமெடியன் பசுபதி!

04 மே, 2015 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Pasupathy-becomes-seriuos-comedian

விஜயசேதுபதி நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் பஞ்சாயத்து செய்யும் அண்ணாச்சி வேடத்தில் நடித்திருந்தார் பசுபதி. அப்படத்தில் நந்திதாவை சிறு வயதில் இருந்தே காதலித்து வந்த விஜயசேதுபதி, அவர் தன்னை காதலிக்காத போதும் காதலித்தே ஆக வேண்டும் என்று துரத்துவார். அதனால் இந்த விசயம் பசுபதியுடம் பஞ்சாயத்துக்கு செல்லும். அப்போது அவர் அதை டீல் பண்ணுவதை காமெடியாக படமாக்கியிருந்தார் டைரக்டர் கோகுல். அதையடுத்து இப்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்தியா பாகிஸ்தான் படத்தில் கிராமத்து அடியாளாக நடித்துள்ளாராம் பசுபதி. அதாவது, கதைப்படி வக்கீலாக நடித்துள்ள விஜய்ஆண்டனிக்கு வரும் கேஸ்களை, சாதுர்யமாக தன் பக்கம் இழுத்து விடுவாராம் இன்னொரு வக்கீலான நாயகி சுஷ்மாராஜ்.


இந்த விசயம் விஜய் ஆண்டனிக்கு தெரியவர, அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்படுமாம். அதனால் ஒருவரை மாற்றி ஒருவர் ஆள் வைத்து அடிக்கும் அளவுக்கு மாறி விடுவார்களாம். அப்போது சுஷ்மாவின் அடியாளாக வரும் பசுபதி, விஜய் ஆண்டனியின் அடியாட்களுடன் வெட்டு குத்து என்ற இறங்குவாராம். இந்த காட்சி சீரியசாக இருந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு காமெடியாக இருக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறதாம். ஆக, இப்படத்தில் சீரியல் காமெடியனாகியிருக்கிறார் பசுபதி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)