Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஓ காதல் கண்மணி' - அமிதாப் பச்சன் பாராட்டு

25 ஏப், 2015 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Amitabh-bachchan-wishes-to--O-Kadhal-kanmani-team

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படம் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் திரையுலகத்தினர் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. பலரும் மணிரத்னம் மீண்டும் அவருடைய சக்சஸ் ஃபார்முலாவிற்கு வந்துவிட்டார் என அவரைப் பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனும் இடம் பெற்றுவிட்டார்.


அது பற்றி அவருடைய வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, “நானும் எனது மகளும் மணிரத்னத்தின் புத்தம் புதிய, ஃபிரஷ்ஷான படத்தைப் பார்த்தோம். இளைஞர்களிடம் காணப்படும் காதலை இனிமையாகவும், அருமையாகவும் சொல்லியிருக்கிறார். கால மாற்றத்திற்கேற்றபடியான விஷயத்தை, இந்தக் கால தலைமுறையின் உணர்வுகளை மிகவும் சாமர்த்தியமாகக் கொடுத்திருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இரண்டு இளமையான திறமைசாலிகள் அவர்களது கதாபாத்திரங்களில் அருமையாக நடித்திருக்கிறார்கள். மம்முட்டியின் மகனின் நடிப்பைப் பார்ப்பது மகிழ்ச்சி. அவரோடு ஜோடியாக நடித்துள்ள இளம் பெண்ணும் மகத்தான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்,” எனப் பாராட்டியுள்ளார் அமிதாப்பச்சன். உலகம் முழுவதும் இந்தப் படம் முதல் வாரத்தில் சுமார் 15 கோடி வரை வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னத்தின் முந்தைய படங்களின் தோல்வியை 'ஓ காதல் கண்மணி'யின் வெற்றி மறைத்துக் கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)