Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளம் பற்றி கவலையில்லை - ஹன்சிகா

10 ஏப், 2015 - 10:09 IST
எழுத்தின் அளவு:
Money-doesnt-matter-:-Hansika-Motwani

தமிழில் தற்போது அதிகப் படங்களை கையில் வைத்திருக்கும் இரண்டாவது நடிகை ஹன்சிகா மட்டுமே. இவர் நாயகியாக நடிக்க அடுத்தடுத்து 'வாலு, ரோமியோ ஜுலியட், உயிரே உயிரே, புலி, இதயம் முரளி'' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. கடந்த ஆண்டிலும் அதிகப் படங்களில் நடித்த ஒரு நாயகியாக ஹன்சிகா இருந்தார். கிளாமராக நடிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை என்பதாலும் ஹன்சிகாவுக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. இவரின் சம்பளம் சுமார் ஒரு கோடி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஹன்சிகா பணத்தைப் பற்றிக் கவலைப்படவே மாட்டாராம்.


சமீபத்திய பேட்டி ஒன்றில் பணம் சம்பாதிப்பதைப் பற்றி அவர் கூறியதாவது, “அனைவரும் பணம் சம்பாதிப்பதற்காகத்தான் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆனால், எனக்கு பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமல்ல. பணத்தின் மீது நான் அதிகமாக ஆசைப்படுவதும் கிடையாது. எனக்குத் தேவையானவற்றை என்னுடைய அம்மா கவனித்துக் கொள்கிறார். எனக்கு என்ன தேவையோ அதை என் அம்மா கொடுத்து விடுவார். அளவுக்கதிகமாக அவரிடம் என்றுமே நான் கேட்பது கிடையாது. நான் எவ்வளவு சம்பாதிக்கிறேன், என்னுடைய சம்பளம் எவ்வளவு என்று கவலைப்பட்டதே கிடையாது. ஏதாவது ஒரு லட்சியம்னு நான வாழ்க்கையில வச்சிக்கிட்டதே கிடையாது, அதனாலதான் மகிழ்ச்சியா இருக்கிறேன்,” என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)