அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
நவரச நாயகன் கேரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று - அமரன். கார்த்திக் நடிப்பில் 1992- ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற அமரன் படத்தை, கே. ராஜேஷ்வர் இயக்கியிருந்தார். இப்படத்தில் கார்த்திக் தாதா கேரக்டரில் நடித்திருந்தார். அத்துடன் இப்படத்திற்காக கார்த்திக் முதன்முறையாக சொந்தக்குரலில் வெத்தல போட்ட சோக்குல என்ற பாடலைப் பாடினார். கார்த்திக் பாடிய இந்தப் பாடல் அப்போது சூப்பர் ஹிட்டானது! அமரன் படத்துக்கு ஆதித்யன் இசையமைப்பாளராக இருந்தாலும் வெத்தல போட்ட சோக்குல பாடலுக்கு விஸ்வகுரு என்ற இசையமைப்பாளர் இசையமைத்திருந்தார்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் கார்த்திக். அவர் நடித்த வில்லன்த கேரக்டர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றிருப்பது. எனவே நெகட்டிவ்ஷேடில் இதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் கார்த்திக்! அதன்படி ஏற்கனவே தாதா கேரக்டரில் அவர் நடித்த அமரன் படத்தின் தொடர்ச்சியாக அமரன்-2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டுள்ள கார்த்திக், இது சம்பந்தமாக அமரன் படத்தை இயக்கிய கே.ராஜேஷ்வரை அழைத்து பேசி இருக்கிறார். விரைவில் இப்படம் சம்பந்தமான அறிவிப்பு வரும் என்று தகவல்! அமரன் படத்துக்கு முன் கே.ராஜேஷ்வர் இயக்கிய இதயத்தாமரை என்ற படத்திலும் கார்த்திக்தான் ஹீரோவாக நடித்திருந்தார்.