Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி கிங் கருணாஸ்க்கு 44வது பிறந்தநாள்!

21 பிப், 2015 - 01:29 IST
எழுத்தின் அளவு:
Karunas-celebrates-44th-Birthday

இயக்குநர் பாலாவின், ''நந்தா'' படத்தில் 'லொடுக்கு' பாண்டியாக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். முதல்படத்திலேயே அவரது காமெடி எல்லோரையும் ரசிக்க வைத்தது. தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்த கருணாஸ், தொடர்ந்து பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். காமெடி நடிகராக மட்டுமல்லாது திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரத்தில் அம்பானி, ரகளபுரம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். 4 படங்களுக்கு இசையமைத்துள்ளார், 5 படங்களை தயாரித்துள்ளார், 40 படங்களை விநியோகமும் செய்துள்ளார்.


நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட கருணாஸ்க்கு சமீபத்தில் வௌிவந்த, ''டார்லிங்'' படம் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. இன்று(பிப்., 21ம் தேதி) கருணாஸ்க்கு 44வது பிறந்தநாள். அவர் நடித்துள்ள 100வது படமான கொம்பன் விரைவில் வௌிவர இருக்கிறது.


இந்நிலையில் 44வது பிறந்தநாளை கொண்டாடும் கருணாஸ் நம்மிடம் பேசுகையில், நடிகராக இருந்த நான் இடையில் ஹீரோ, தயாரிப்பு என பிற துறைகளில் கவனம் செலுத்தியதால் இடையில் கொஞ்சம் சறுக்கல். இனி மற்ற துறைகளுக்கு தாவாமல் முழுக்க முழுக்க காமெடி மற்றும் நல்ல குணச்சித்திர வேடங்களில் நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன். சமீபத்தில் வௌியான டார்லிங் படத்தில், ஞானவேல்ராஜா, ''காமெடி கிங்'' கருணாஸ் என்று போஸ்டர்களில் விளம்பரப்படுத்தி எனக்கு ஒரு புதிய அங்கீகாரத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தார். இனி அதை அப்படியே தொடர இருக்கிறேன். மற்றவர்களை சந்தோஷப்படுத்தி, காமெடியில் கிங்காக வலம் வரவே ஆசைப்படுகிறேன். இங்கு நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு ரசிகர்களுக்கும், என் வளர்ச்சியில் என் பெயர் சொல்கிற அத்தனை இயக்குநர்களுக்கும் இந்த தருணத்தில் நான் நன்றி சொல்கிறேன்.


இவ்வாறு கருணாஸ் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)