Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளராகிறார் நிவின் பாலி...

31 ஜன, 2015 - 11:04 IST
எழுத்தின் அளவு:

மலையாள நடிகர்கள், தாங்கள் ஸ்திரமாக காலூன்றிய பின்னர் தயாரிப்பாளராக மாறுவது கேரளாவுக்கு ஒன்றும் புதிதல்ல.. பிருத்விராஜ், ஜெயசூர்யா, சமீபத்தில் கூட பஹத் பாசில் என முன்னணி இளம் ஹீரோக்களும் கூட தயாரிப்பாளர்கள் லிஸ்ட்டிலும் சேர்ந்து விட்டார்கள்.. அந்தவகையில் 'நேரம்' படத்தின் மூலம் அறிமுகமான நிவின் பாலியின் நேரம் இப்போது நன்றாகவே இருப்பதால், அவரும் 'ஆக்சன் ஹீரோ பைஜூ' என்கிற படத்தின் மூலமாக தயாரிப்பாளர் என்கிற தொப்பியை எடுத்து தைரியமாக அணிந்திருக்கிறார். படத்தை இயக்குபவர் அப்ரிட் ஷைன்.. இவர்தான் கடந்த வருட துவக்கத்திலேயே, கிரிக்கெட்டை மையமாகவைத்து ஒரு புதிய கோணத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான '1983' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தவர். நிவின் பாலியின் வளர்ச்சியை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றவர். அதனாலேயே தான் தயாரிக்கும் முதல் படத்தை அப்ரிட் வசம் ஒப்படைத்திருக்கிறார் நிவின்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)