மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
8 பாயிண்ட் என்டர்டெயின்மென்ட் என்ற புதிய பட நிறுவனம் சாம்பில் சிங்கப்பூர் தமிழர் பி.அருமைச்சந்திரன் தயாரிக்கும் படம் வாடா போடா நண்பர்கள். பெங்களூருவை சேர்ந்த யாஷிகா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். புகைப்படம் படத்தின் நான்கைந்து நண்பர்களுள் ஒருவராக நடித்த சி.வி.நந்தாவும், அதே மாதிரி நான்கைந்து நண்பர்களுள் ஒருவராக இனிது இனிது படத்தில் நடித்த ஷரணும் இணைந்து நடிக்கும் இப்படத்தினை மாணிகை எணும் புதியவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் அருண் ஜேம்ஸூம், இசையமைப்பாளர் சித்தார்த்தும் கூட அறிமுகங்கள்தான்.
இப்படத்தின் புரமோஷனுக்கு உதவியாக நட்பு பற்றியும், நண்பர்கள் பற்றியும் திரையுலக விஐபிக்கள் பிரேம்ஜி முதல் பாலுமகேந்திரா வரை பேசிய பேச்சுக்களையே தனியாக ஒரு ஷோ திரையிடலாம் எனும் அளவுக்கு படம் பிடித்திருந்தார்கள். அதை வாடா போடா நண்பர்களின் ஆடியோ வெளியீட்டில் திரையிட்டு கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மணிகை என்றால் மிகையல்ல!