Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டூப்பை விரும்பாத காவ்யா மாதவன்!

07 ஜன, 2015 - 10:36 IST
எழுத்தின் அளவு:

தமிழில் காசி, என் மனவானில் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை காவ்யா மாதவன். நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்த இவர், பின்னர் விவாகரத்து செய்து விட்டதையடுத்து, சினிமாவில் மீண்டும் பிசியாகி விட்டார். அதோடு, மலையாள நடிகர்களுடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது 4 மலையாள படங்களில் நடித்து வரும் காவ்யா மாதவன், கேரளாவில் ஷீ டாக்ஸி -என்ற பெயரில் பெண்கள் மட்டுமே ஓட்டக்கூடிய கால் டாக்சி ஓடுவதை அடுத்து, அதை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஷீ டாக்ஸி என்ற படத்தில் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார்.


இந்த படத்துக்காக பவர் ஸ்டியரிங் பொருந்திய அம்பாசிடர் கார் ஓட்டி பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்தாராம் காவ்யாமாதவன். ஆனால், போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அவர் கார் ஓட்டியபடி நடித்தால் விபத்துக்கள் ஏற்பட்டு விடும் என்று கருதிய இயக்குனர் ஷாஜி, அந்த காட்சிகளில் டூப் டிரைவரை பயன்படுத்தலாம் என்று சொன்னாராம். ஆனால், காவ்யாவோ, நானே ஓட்டியபடி நடிப்பதுதான் சரியாக இருக்கும். என்று பிடிவாதமாக சொல்லி விட்டாராம். மேலும், பினனர் மலைப்பாதைகளிலும் கார் ஓட்டிய காவ்யா மாதவன், படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தினமும் 20 கிமீ தொலைவுக்கு அந்த அம்பாசிடர் காரை தானே ஓட்டி அனைவரையும் வியக்க வைத்தாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)