ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
ஒரு பெண் ஒரே மேடையில் இரு ஆண்களை திருமணம் செய்யும் கதையம்சத்துடனான புதிய படத்தை இயக்கியிருக்கும் டைரக்டர் அன்புவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டைரக்டர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் மிட்டாய் என்ற படத்தை இயக்கியிருப்பவர் டைரக்டர் அன்பு. இதில் சந்தோஷ், பிரபா என 2 பேர் நாயகர்களாகவும், மாயா உன்னி நாயகியாகவும் நடித்துள்ளனர். கதைப்படி. சந்தோஷூம், பிரபாவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் மாயா உன்னியை காதலிக்கின்றனர். மாயா உன்னியும் இருவர் அன்பிலும் நெகிழ்கிறார். நண்பர்கள் இருவரையும் அவரும் காதலிக்கிறார் ஒருவரை ஒதுக்கிவிட்டு இன்னொரு வரை திருமணம் செய்ய அவருக்கு மனம் வரவில்லை. என்ன முடிவு எடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ். இரண்டு பேரையுமே திருமணம் செய்து கொள்வது போல் கதையை இயக்குனர் முடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு ஹீரோக்களுடனும் மாயா உன்னி மாலையும் கழுத்துமாய் திருமண கோலத்தில் இருப்பது போன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது தமிழ் கலாசாரத்துக்கு எதிராக படம் எடுத்திருக்கும் டைரக்டர் அனபுவுக்கு கொலை மிரட்டலும் வந்திருக்கிறதாம். இதுபற்றி அன்பு கூறுகையில், காதலையும், நட்பையும் வைத்து இப்படத்தை எடுத்துள்ளேன். ஒரு பெண் முடிவு எடுத்துவிட்டால் யார் என்ன செய்ய முடியும்? என்பதே படத்தின் கரு. புரட்சிகரமான கருவுடன் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் வருகின்றன. சிலர் டெலிபோனில் என்னை மிரட்டுகிறார்கள். ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்பதுதான் நம் கலாச்சாரம். இரு ஆண்களை திருமணம் செய்வது போல் எப்படி படம் என்று மிரட்டுகிறார்கள். என் கதைக்கு தேவையான முடிவைத்தான் கிளைமாக்சில் வைத்துள்ளேன். படத்தை பார்த்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று அவர்களிடம் கூறியுள்ளேன். ஆனாலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன, என்றார்.