Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தோல்விக் கூட்டணி...மீண்டும் ஒரே படத்தில்...?

21 டிச, 2014 - 10:49 IST
எழுத்தின் அளவு:

மலையாளத்தில் பெண் இயக்குனரான அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், பகத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா, இஷா தல்வார், நித்யா மேனன், பார்வதி மேனன் மற்றும் பலர் நடித்து இந்த ஆண்டு, மே மாதம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பெங்களூர் டேஸ்'. இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கை ஒரே சமயத்தில் படமாக்க உள்ளார்கள். தெலுங்கில் 'பொம்மரிலு' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த பாஸ்கர் இப்படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஐந்தாறு முக்கியக் கதாபாத்திரங்கள் இருப்பதால் அவற்றில் இளம் முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். இரண்டு மொழிக்கும் பொதுவான நடிகர், நடிகையரைக் கண்டு பிடித்து அவர்களின் கால்ஷீட்டைப் பெற முயற்சித்து வருகிறார்கள்.


ஆர்யா, சித்தார்த், சமந்தா ஆகியோர் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது புதிதாக நித்யா மேனன் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளாராம். சித்தார்த், சமந்தா, நித்யா மேனன் மூவரும் இணைந்து நடித்த 'ஜபர்தஸ்த்' என்ற படம் தெலுங்கில் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. தமிழில் சித்தார்த், நித்யா மேனன் ஜோடி சேர்ந்து நடித்த '180' திரைப்படமும் படுதோல்விப் படம்தான்.


அப்படியிருக்க இரண்டு மொழிகளிலுமே தோல்வியடைந்த தோல்விக் கூட்டணியை ஒரு வெற்றிப் பட ரீமேக்கில் மீண்டும் இணைக்க உள்ளது திரையுலகில் ஆச்சரயத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்டிமென்ட் நிறைந்த திரையுலகத்தில் அதை நிறையவே பார்ப்பார்கள். 7 இளம் முன்னணி நட்சத்திரங்களைத் தேடிப் பிடித்து ஒரே படத்தில் நடிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல...ஆனால், அதற்குள்ளாகவே ராசி, சென்டிமென்ட் என பேச ஆரம்பித்து விட்டார்கள். போகப் போக என்னவெல்லாம் பேசுவார்களோ...

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)