Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 கோடி சம்பளம் கேட்ட காஜல் அகர்வால்

03 டிச, 2014 - 11:42 IST
எழுத்தின் அளவு:

காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி, ஜில்லா படங்கள் வணிக ரீதியில் வெற்றியடைந்த படங்கள்தான். ஆனாலும், ஜில்லா படத்திற்குப் பிறகு காஜல் அகர்வாலுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு புதிய படங்கள் ஒப்பந்தமாகவில்லை. காரணம்...அவர் கேட்ட சம்பளம்! ஒன்றரை கோடி சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர்கள் மிரண்டனர். இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலின் உடன் ஏற்பட்ட பஞ்சாயத்து காரணமாகவும் காஜலை கதாநாயகியாக கமிட் பண்ண யோசித்தனர்.


இந்தப் பிரச்சனைகள் காரணமாக அவருக்கு வேறெந்த படமும் ஒப்பந்தமாகாத நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாரி படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தனுஷுக்கும், காஜல் அகர்வாலுக்கும் ஒரே மானேஜர்தான். எனவே தனுஷை கன்வின்ஸ் பண்ணி மாரி படத்துக்கு கமிட் பண்ண வைத்தார் காஜலின் மானேஜர்.


காஜலுக்கு ஒன்றரை கோடி கொடுத்து தனுஷ் கமிட் பண்ணியது தெரிந்ததும் விஷாலும் காஜலை சிபாரிசு செய்து தனக்கு ஜோடியாக்கிக் கொண்டிருக்கிறார். ஆம்பள படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் படமொன்றில் நடிக்கிறார் விஷால். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மூன்றாவது முறையாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார் என செய்திகள் வந்தன. இந்நிலையில் இதில் திடீர் திருப்பமாக லக்ஷ்மி மேனனுக்கு பதில், இப்படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஜீவா படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் முதல்முறையாக விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இப்படத்தின் படப்பிடிப்பு 2015 பிப்ரவரியிலிருந்து துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


விஷாலுக்கு தெலுங்கில் ஓரளவு பிசினஸ் இருப்பதால் இந்தப்படத்தை தமிழ் மட்டுமின்றிலும் பெரிய விலைக்கு பிசினஸ் செய்ய இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, தனக்கு இரண்டு மொழிக்கும் சேர்த்து 3 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டு வருகிறாராம் காஜல் அகர்வால். 3 கோடி சம்பளம் தர முடியாது என்று மறுத்த வேந்தர் மூவீஸ் காஜலுக்கு ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறது. அதற்கு சம்மதித்தால் அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)