Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் கீழே விழும்போது என் கையை பிடித்துக்கொண்டார் பாலா! -டைரக்டர் மிஷ்கின் பேச்சு

16 நவ, 2014 - 02:54 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் பாலாவின் பி ஸ்டுடியோ தயாரித்துள்ள படம் பிசாசு. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் நாகா, பிரயாகா, ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரவிராய் ஒளிப்பதிவு செய்ய, அரால் கொரிலி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. அப்போது டைரக்டர்கள் பாலா, மிஷ்கின், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


விழாவில் டைரக்டர் மிஷ்கின பேசுகையில், இந்த படத்துக்காக என் நிழல்போல் இருந்தார் கேமராமேன் ரவிராய். அதேபோல் நாயனாக நடித்துள்ள நாகா கடுமையாக உழைத்திருக்கிறான் . 4 மாதங்களாக அவனை பெண்ட கழற்றினேன். என் அலுவலகத்திலேயே தங்கியிருந்து நடித்தான். ஒரே சீனை 100 தடவை சொன்னாலும் திரும்பத்திரும்ப நடித்தான். அதேபோல் நாயகியாக நடித்துள்ள பிரயாகாவும் கடின உழைப்புதான். இந்த படத்தில் பல காட்சிகளில் அவர் பிசாசாகத்தான் நடித்துள்ளார் 60, 70 அடி உயரத்தில் ரோப்பில் தொங்கியபடி நடித்தார். அதைப்பார்த்து அவரது அப்பா-அம்மா அழுதனர். சில நேரங்களில் ரோப்பில் தொங்கும்போது சுவற்றில் அடிபட்டு அவர் உடம்பில் ரத்தம் வழிந்தது. ஆனபோதும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தார் பிரயாகா. வேறு எந்த நடிகையும் இந்த அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுத்து நடிக்க மாட்டார்கள்.


மேலும், இந்த படத்துக்காக கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முதன்முறையாக பாடலாசிரியராக அறிமுகமாகியிருக்கிறார். மொத்த பாடல்களையும் ஒரே நாளில் எழுதி விட்டார். அவருக்கு டியூனுக்கு எழுதி பழக்கமில்லை என்பதால், அவரை பாடல எழுத வைத்து அதற்கு டியூன் போட வைத்தேன். அவரது பாடல்களுக்கு விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது.


அவரையடுத்து, மியூசிக் டைரக்டர் ஆரால் கொரிலி. 6 மாதமாக கீப்போர்டு பக்கத்திலேயே படுத்திருந்தார். எப்போது வித்தியாசமான சவுண்ட் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் உடனுக்குடன் அதை பதிவு செய்து என்னை மிரட்டினார். அந்த வகையில் முன்பு இசையால் என்னை இளையராஜா மிரட்டினார் அதன்பிறகு இப்போது இவர் மிரட்டியிருககிறார். அவரது இசை இந்த ஹரர் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.


இவர்களுக்கெல்லாம் மேலாக டைரக்டர் பாலா. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு நீங்களெல்லாம் நல்ல விமர்சனங்கள் கொடுத்தீர்கள். படம் பார்த்தவர்களும் பாராட்டினர். ஆனால் சிலபல காரணங்களால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் நான் கலங்கி நின்றேன்.அப்போது அந்த படத்தை பார்த்து கண்ணீருடன் என்னை அழைத்தார் டைரக்டர் பாலா. எனது கஷ்டத்தை கேட்டறிந்து உடனே தனது நிறுவனத்துக்கே படம் இயக்கும் வாய்ப்பினை கொடுத்தார். அந்த வகையில், நான் கீழே விழும்போது என் கையை பிடித்து என்னை காப்பாற்றி விட்டார் பாலா. அவர் 200 வருடம் நலமாக வாழ வேண்டும் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)