டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் |
இதுவரை வில்லனாகவே நடித்து வந்த பவன், முதன் முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் விலாசம். ஷனம் செட்டி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், சுஜிபாலா, ஷர்மிளி நடித்துள்ளனர். "விலாசம் இருப்பவர்கள், விலாசம் இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் உலகில் உள்ள அனைவருக்கும் விலாசம் கிடைத்து விடும் என்ற கருத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். ஹீரோவாக கரடுமுரடான ஒரு ஆள் தேவைப்பட்டார். அதற்கு பவன் பொருத்தமாக இருந்ததால் அவரையே ஹீரோவாக்கி விட்டோம். அம்புலி ஹீரோயின் ஷனம் ஷெட்டிக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.
கதையை கேட்டுவிட்டு யு.கே.செந்தில்குமார் தாமாக முன்வந்து ஒளிப்பதிவு செய்து கொடுத்தார். ரவி ராகவ் இசையில் 4 பாடல்கள் பிரமாதமாக வந்திருக்கிறது. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்து ஒரு நல்ல மெசேஜ் சொல்றோம். ரசிகர்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்" என்கிறார் இயக்குனர் பா.ராஜகணேசன்.