Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கத்துக்குட்டி படக்குழு!

27 ஆக, 2014 - 02:34 IST
எழுத்தின் அளவு:

நரேன் - சூரி கூட்டணியில் பக்கா காமெடி படமாக உருவெடுத்து வரும் கத்துக்குட்டி இருவருக்குமே மிகப் பெரிய அளவில் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த நேரத்தில் சூரி, கத்துக்குட்டி படத்துக்காகச் செய்த பேருதவி நினைவுகூறத்தக்கது. கத்துக்குட்டி ஷூட்டிங்கிற்காக படக்குழு, சூரியிடம் கால்ஷூட் கேட்டபோது, அவருடைய டைரி நிரம்பி வழிந்ததாம். கத்துக்குட்டி படத்தின் கதைக்கு மட்டும் தலைவணங்கி மிக பிஸியான நேரத்தில் தனது கால்ஷீட்டை ஒதுக்கி நடித்து கொடுத்துள்ளார்.


முதலில் அவரிடம் 15 நாட்கள் கால்ஷீ்ட் கேட்டுள்ளனர், படத்தில் ஹீரோவுக்கு நிகரான பாத்திரம் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு படங்களில் மிகுந்த பரபரப்பாக நடித்துவந்த சூரியை அதற்கு மேல் கால்ஷூட் கேட்டு தொந்தரவு செய்துவிடக் கூடாது என எண்ணியிருந்தார்கள் படக்குழுவினர். ஆனால், படத்தின் ஷூட்டிங் நல்லபடி நடைபெற வேண்டும் என்பதற்காக, தானே வலிய முன்வந்து கூடுதலாக நாட்களை ஒதுக்கிக் கொடுத்து சூரி செய்த உதவி காலத்துக்கும் மறக்க முடியாதது என்கின்றனர்.


ஆவடியில் உள்ள ஒரு மதுபானக் கடையில் லைவ்வாக ஷூட்டிங் நடத்த இயக்குநர் திட்டமிட்டபோது, சூரியை வைத்து பாருக்குள் ஷூட்டிங் நடத்துவது சிரமம். அதனால், செட் போட்டு படமாக்கலாம் எனப் பலரும் சொன்னார்கள். ஆனால், இயக்குநரின் விருப்பத்தைத் தட்டாமல், ஒரிஜினல் பாரில் அமர்ந்து, குடிமகன்களின் அநியாய அலப்பறைகளைப் பொறுத்துக்கொண்டு ஒரு நாள் முழுக்க அங்கேயே நடித்துக் கொடுத்தார் சூரி.


அப்படி உணர்வுப்பூர்வமாக நடித்த சூரிக்கு கத்துக்குட்டி படக்குழு சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று (27.8.2014) பிறந்த நாள் கொண்டாடும் நகைச்சுவை சூறாவளி சூரி பல்லாண்டுகள் வாழவும் சந்திரபாபு, கலைவாணர், நாகேஷ் வரிசையில் காலத்தை வென்ற காமெடி நாயகராக கொடிகட்டி ஆளவும் வாழ்த்துகிறோம் என கத்துக்குட்டி டீம் கூறியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)