Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!

21 ஆக, 2014 - 12:00 IST
எழுத்தின் அளவு:

கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் சில கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வந்தார் முருகதாஸ். அதையடுத்து, தற்போது மாணவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டிருக்கிறது.


இதற்கிடையே, பிரபாகரனின் மகன் பாலசந்திரனை மையப்படுத்தி உருவாகியுள்ள புலிப்பார்வை படத்திற்கும் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்துக்கொண்டேயிருக்கிறது. அப்படத்தின் ஆடியோ விழாவின்போதுகூட எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை சீமானின் நாம் தமிழர் இயக்கத்தில் அடித்து காயப்படுத்தினர்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அருகே புதிய பாரதம் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அப்போது அக்கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பேசுகையில், புலிப்பார்வை படத்தில் பாலசந்திரன் தீவிரவாதி போன்று சித்தரித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது.


மேலும் விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவின் ஆதரவாளர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதனால் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்கும் தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் இந்த படத்தில் இருந்து விலக வேண்டும். மறுத்தால் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து புதிய பாரதம், அப்படத்துககு எதிராக தொடர்ந்து போராடும். விஜய், முருகதாஸ் இருவரும் கத்தி படத்திலிருந்து விலகாவிட்டால், விரைவில் அவர்கள் இருவரது வீடுகள் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)