ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி | காதலருடன் கட்டியணைத்து போஸ் கொடுத்த சமந்தா | 50 கோடி கிளப்பில் இணைந்த ‛டயஸ் இரே' : ஹாட்ரிக் அடித்த பிரணவ் மோகன்லால் | கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக தள்ளிப்போன விருஷபா | பான் இந்தியா படமாக வெளியாகும் ஹனி ரோஸின் ரேச்சல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | சச்சினை இயக்கிய ஓஜி பட இயக்குனர் |
சமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காவிரி என்ற தமிழ்ப்படத்தில்தான் அதையடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். பின்னர் தெலுங்கிலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தெலுங்கில் அதிகமான படங்கள் கிடைத்ததால் அங்கே முன்னணி நடிகையாகி விட்டார்.
இந்நிலையில், ஆந்திராவிலேயே தனது தலைமை அலுவலகத்தை உருவாக்கி விட்டார் சமந்தா. அவரை பட விசயமாக யார் தொடர்பு கொண்டாலும் ஆந்திராவில் இருக்கும் அவரது மேனேஜரிடம்தான் பேச வேண்டுமாம். இதையடுத்து சமந்தாவுக்கு சென்னை பிடிக்கவில்லை என்றொரு செய்தி மீடியாக்களில் பரவியிருக்கிறது.
இதுபற்றி சமந்தா கூறுகையில், நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். நான் படித்தது சென்னையிலுள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி என்பதால் எனது தோழிகள் அனைவருமே சென்னையில்தான் உள்ளனர். அதனால் சென்னை வந்தால் எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும். அதனால் சென்னை எனக்கு பிடிக்காது என்று செய்தி பரவியிருப்பது வேடிக்கையாக உள்ளது. என்று கூறியுள்ள சமந்தா, சென்னையிலுள்ள எனது தோழிகளை நான் அதிகமாக மிஸ் பண்ணுவதாக நான் அடிக்கடி பீல் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.