Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொம்பன் படத்தில் முக்கிய வேடத்தில் ராஜ்கிரண்!

22 ஜூலை, 2014 - 09:57 IST
எழுத்தின் அளவு:

பையா, சிறுத்தை படங்களின் ஹிட்டுக்கு பிறகு சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி என தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்த கார்த்தி, தற்போது அதிக நம்பிக்கையுடன் நடித்துள்ள படம் மெட்ராஸ். அட்டகத்தி ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார்.


தற்போது அப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்து கொம்பன் என்ற படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இப்படத்தை குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். இதில் கார்த்தி சிங்கம் படத்தில் அவரது அண்ணன் சூர்யா வைத்தது போன்ற அருவா மீசை கெட்டப்பில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.


அதோடு, ராஜ்கிரணும் இப்படத்தில் நடிக்கிறார். கிராமத்து கதை என்பதால் அவரை மையப்படுத்திதான் கதையே நகர்கிறதாம். அந்தவகையில், பாண்டவர் பூமி, நந்தா, தவமாய் தவமிருந்து, வேங்கை, மஞ்சப்பை படங்களைப் போன்று ராஜ்கிரணுக்கு இதுவும் ஒரு முக்கியமான படமாக இருக்குமாம். ஆனால், இதில் அவர் கார்த்திக்கிற்கு அப்பா வேடத்தில் நடிக்கிறாரா, இல்லை கிராமத்து பெரும்புள்ளியாக நடிக்கிறாரா என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)