Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயம்ரவியிடம் சிக்ஸ்பேக் பயிற்சி கேட்கும் ரசிகர்கள்!

26 ஜூன், 2014 - 12:28 IST
எழுத்தின் அளவு:

பேராண்மை படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா பாதையே மாறியது. அதுவரை சாக்லேட் ஹீரோவாக இருந்தவரை ஜனநாதன்தான் மோல்டு பண்ணி ஆக்சன் ஹீரோவாக மாற்றிக்காட்டினார். அதை கப்பென்று பற்றிக்கொண்ட ஜெயம்ரவி, அதன்பிறகு அதிரடி ஆக்சன் கதைகளாக தேடினார். ஆனபோதும் அப்படி அவருக்கு கிடைத்த ஆக்சன் படங்களான ஆதிபகவன், நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் ஹிட்டடிக்கவில்லை.


இருப்பினும் ஆக்சன் ரூட்டை விடுவதாக இல்லை ஜெயம்ரவி. தற்போது தனது அண்ணன் ஜெயம்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படத்துக்கு இணையான ஒரு மாறுபட்ட ஆக்சன் கதையில் நடிக்கிறார். அந்த படத்தில் அவருக்கு மட்டுமின்றி கதாநாயகியாக நடிக்கும் நயன்தாராவுக்கும் ஆக்சன் வேடம்தானாம்.


இந்தநிலையில், அதற்கடுத்து ஜெயம் ரவி நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தில் சிக்ஸ்பேக்கிற்கு ஆலோசனை வழங்குபவராக நடிக்கிறார். அதனால் தனது உடல்கட்டையும் சிக்ஸ்பேக்கிற்கு மாற்றியுள்ள அவர், கதைப்படி, ஆர்யா உள்ளிட்ட சில நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் ஆலோசனை கொடுப்பவராகவும் நடித்துள்ளார்.


இந்த செய்தி வெளியானதில் இருந்து ஜெயம்ரவியை இணையதளங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் ரசிகர்கள், சிக்ஸ்பேக் வைப்பது எப்படி? என்று ஆலோசனை கேட்கிறார்களாம். அதனால் அப்படம் திரைக்கு வரும்போது படம் பற்றி ரசிகர்களிடம் கருத்து கேட்க இருக்கும் ஜெயம்ரவி, அப்போது சிக்ஸ்பேக் வைப்பதற்கு என்னென்ன பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)