சன்னி லியோனை தமிழுக்கு கொண்டு வர மீண்டும் முயற்சி | அவினாஷ், ஐஸ்வர்யா நடிக்கும் ஆனந்தி | தமிழில் ரீமேக் ஆகிறது ஹிந்தி ஆர்ட்டிகள் 15 : படப்பிடிப்பு தொடங்கியது | இளம் கன்னட நடிகர் கொரோனவுக்கு பலி | சிறுமிக்கு பாலியல் தொல்லையா? : காமெடி நடிகர் டேனியல் பற்றி இணையத்தில் பரபரப்பு | அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1 | ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு |
கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று எந்த டைரக்டர் லட்சுமிமேனனைப்பார்த்து சொன்னாலும், கோபக்கனல் பறக்க அவர்களைப்பார்த்து கண்களை உருட்டுவார். அதில் தெரியும் ஆவேசம் டைரக்டர்களை அடுத்த வார்த்தை பேச விடாமல் செய்து விடும். அந்த அளவுக்கு கவர்ச்சிக்கு தான் ஜென்ம எதிரி போன்று தன்னை வெளிப்படுத்தி வந்தார் லட்சுமிமேனன்.
ஆனால், தற்போது விஷாலுடன் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில், இன்னொரு நாயகியாக நடிக்கும் இனியாவின் கவர்ச்சி தாக்கம் அதிகமாக இருப்பதால், தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, கவர்ச்சிக்கதவுகளை ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார் லட்சுமிமேனன். அதன் எதிரொலியாக பாண்டியநாடு படத்தை விடவும் விஷாலுடன் ஓவர் நெருக்கம் காட்டியிருப்பவர், படம் முழுக்க மாடர்ன் காஸ்டியூமில் கலக்கியிருக்கிறாராம்.
அதோடு, விஷாலுடன் ஒரு காட்சியில் தண்ணீருக்கு அடியில் முங்குவது போன்று ஒரு செமத்தியான காட்சி உள்ளதாம். அதில் லட்சுமிமேனனின் கட்டுப்பாட்டையும் மீறி அவரது கவர்ச்சி வெளிப்பட்டுள்ளதாம். இந்த செய்தி கோலிவுட்டில் வேகமாக கசிந்ததையடுத்து, லட்சுமிமேனனும் கவர்ச்சி கட்சியில் சேர்ந்து விட்டார் என்று, அவரை மனதில் கொண்டு கதை பண்ணியிருக்கும் இயக்குனர்கள், இப்போது சில கிளாமர் காட்சிகளையும் எக்ஸ்ட்ராவாக ஸ்கிரிப்டில் இணைத்து வருகிறார்கள்.