பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி | டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசு | துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப் | புதிய சிக்கல்களில் விஜய்யின் 'ஜன நாயகன்' | துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை | புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா | மோகன்லாலின் ராவண பிரபு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஹைதராபாத்தில் கன்னடத்தில் பேசிய சர்ச்சைக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் |
இந்திய சினிமாவில் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பட தயாரிப்பு செய்து வரும் நிறுவனம் ஏ.வி.எம்., ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரில் தொடங்கி, அதன்பிறகு ஏ.வி.எம். சரவணன், பிறகு அவரது வாரிசு ஏ.வி.எம். குகன் என்று வளர்ந்த இவர்களது தயாரிப்பு துறை இப்போது நான்காவது தலைமுறையையும் எட்டியுள்ளது. குகனின் பெண் வாரிசுகள் அபர்ணா குகன், அருணா குகன் 55 நிமிடம் ஓடக்கூடிய படம் ஒன்றை தயாரித்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து அபர்ணா குகன், அருணா குகன் கூறியிருப்பதாவது, 'கசப்பு இனிப்பு' என்ற குறும்படத்தை யூ-டூயூப்பில் பார்த்தோம். அந்த குறும்படம் எங்களை கவர்ந்தது. உடனே அந்த டைரக்டரை அழைத்து இதை கொஞ்சம் பெரிய படமாக இயக்க முடியுமா என்று கேட்டோம். அதன்படி இயக்குனர்கள் அணில் மற்றும் ஹரிஸ்ரீ ஆகிய இருவரும் 'இதுவும் கடந்து போகும்' என்ற பெயரில் 55 நிமிடம் ஓடக்கூடிய படத்தை உருவாக்கி தந்தார்கள். இப்படத்தை நேரடியாக மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக இணையதளம், டி.வி., மூலம் ரிலீஸ் செய்ய உள்ளோம். எதையாவது புதுசாக செய்யணும் என்ற ஆர்வம் தான் எங்களை இந்தப்படத்தை இப்படி ரிலீஸ் செய்ய வழிவகுத்துள்ளது என்று கூறியுள்ளனர்.