'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
அஜித்தின் அசல் பட ஆடியோ வெளியீட்டு விழா நடிகர் திலகம் சிவாஜியின் இல்லத்தில் மீடியாக்கள் முன்னிலையில் வெகு சிம்பிளாக நடந்தது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் பேனரில் நடிகர் பிரபு தயாரித்து வழங்க, பரத்வாஜ் இசையில் சரண் இயக்கத்தில் அஜித் - பாவனா - சமீரா ரெட்டி நடித்திருக்கும் இப்படத்தில் அஜித் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இதுநாள் வரை டபுள் ஆக்டிங் என்பதை சஸ்பென்சாக வைத்திருந்த அசல் யூனிட், ஆடியோ வெளியீட்டில் அதை அவிழ்த்து விட, சிவாஜி வீட்டிற்கு வெளியில் குழுமியிருந்த அஜித் ரசிகர்கள் ஆரவாரமிட்டனர்.
அதே மாதிரி அசல் படத்தின் சப் - டைட்டிலான தி பவர் ஆப் சைலன்ஸ் எனும் ஆங்கில வாசகத்தில் பவர் அஜித்தின் மனைவி ஷாலினி என்றும், சைலன்ஸ் அஜித் என்றும் பிரபு கூறியபோது வெளியில் நின்ற ரசிகர்களைப் போலவே, அருகில் அமர்ந்திருந்த ஷாலினியும் உற்சாகத்தில் வாய் விட்டு சிரித்தார். ஆர்ட் டைரக்டர் பிரபாகர், கேமரா மேன் பிரசாந்த் டி மிஸ்சாலே, இசையமைப்பாளர் பரத்வாஜ், பிரபு, ராம்குமார், யூகி சேது உள்ளிட்ட அசல் யூனிட் அத்தனை பேரும் கலந்து கொண்ட இவ்விழாவில் பாடலாசிரியர் வைரமுத்துவும், பாவனாவும் மிஸ்ஸிங்!