நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தெலுங்கு நடிகர் ஆதி தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அரவான், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தாலும், 2007ம் ஆண்டில் சாமி இயக்கத்தில் வெளிவந்த 'மிருகம்' படத்தில் தனது மிரட்டலான நடிப்பின் மூலம் தான் பேசப்பட்டார். அந்த படத்தில் கடுமையான உழைப்பை தந்து நடித்திருப்பார்.
சமீபத்தில் ஆதி அளித்த பேட்டியில் மிருகம் படத்தை குறித்து கூறியதாவது, "மிருகம் படம் முதல் பாதியை படமாக்கி வரும் போது உடல் எடையை கூட்டி நடித்தேன். சமோசா மாதிரி கிடைக்குறது எல்லாம் சாப்பிடுவேன். ஆனால்,இரண்டாம் பாதிக்காக உடல் எடையை 3 மாதத்தில் குறைத்து ஆக வேண்டிய கட்டாயம். கஷ்டப்பட்டு குறைத்தேன். அதன்பிறகு சாப்பிட முடியாமல் கை நடுங்கும் அவ்வளவு பலவீனமாக இருந்தேன். அந்த படத்துக்கு அந்த உழைப்பு தேவைப்பட்டது, செய்தேன்" என்றார்.