தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

பாண்டிராஜ் இயக்கிய 'தலைவன் தலைவி' படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தில் அவருடன் ஹிந்தி நடிகை தபு, மலையாள நடிகை சம்யுக்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகை சார்மி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கேரக்டர் குறித்த ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதில், இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருப்பதாகவும், தபுவை அவர் காதலிப்பது போன்ற கதையில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.