'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சமீபத்தில் ஒரு நபர் தனது டுவிட்டரில் நடிகைகளை விலைமாதுக்களாக சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்தார். குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தவறான வழியில் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நடிகைகள் கொதித்தெழுந்துள்ளனர்.
அதிலும் நடிகை குஷ்பு ரொம்பவே டென்சனாகியிருக்கிறார். அந்த டுவிட்டர் செய்திக்கு அவர் பதிலளிக்கையில், நடிகைகளை பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்கள் என்று சராசரி மனிதர்கள் யாரும் குறிப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி ஒரு நபர் கூறியிருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் விபச்சார புரோக்கராகத்தான இருக்க வேண்டும். அவருக்கும், யாரேனும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட மோதலை அவர் இப்படி ஒட்டுமொத்த நடிகைகளைப்பற்றியும் கருத்து சொல்லியிருக்கிறார். இது தவறு.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தமாதிரி தவறான செய்தி பரப்புபவர்களை கண்டும் காணாததும் போல் இருக்கக்கூடாது. கடுமையாக தண்டிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற செய்திகளை வெளியிட அவர்கள் அஞ்ச வேண்டும் என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.